தஞ்சையில் நடந்த ராஜராஜ சோழன் சதயவிழாவில் தருமபுரஆதீனம் குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமி கள் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மாமன்னன் ராஜராஜசோழனின் சதய விழாவை அரசு விழாவாக கொண்டாடபடுவது சிறப்புக்குரியது. திருமுறையை கண்டெடுத்து, 48 ஓதுவார்கள் என்ற பிடார்களை நியமித்துள்ளார். சித்தரை சதய நாளில் சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோவிலில், 490 திருமுறை செப்பேடுகள் கிடைத்தது. அந்த செப்பேடுகளை கலைக்கூடமாக உருவாக்கி வைத்து பாதுகாத்திட, வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். திருமுறைக்காக கடல் கடந்து தொண்டு செய்யும் விதமாக நமது சமயத்தை பரப்பியவர் ராஜராஜசோழன்.
தருமை ஆதீனத்தில், திருமுறை ஓதுவார்களை உருவாக்கி, திருமுறைகளை காகிதத்திலும், செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் கோவில்கள் தோறும் பதித்துக்கொண்டு வருகிறோம். மொபைல் ஆப் உருவாக்கி, 14 மொழிகளில் மொழிபெயர்த்து வைத்துள்ளோம்.
ஓதுவார்களுக்கு ஐந்து ஆண்டு காலம் முறையாக படிக்க வேண்டும். அப்படியாக படிக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் 40 பதிகங்கள் வீதம், ஐந்து ஆண்டுகளில் 40 ஆயிரம் பாடல்களை படிக்க வேண்டும். அப்படி முழுமையாக படித்து தகுதியோடு, இருக்கும் பெண் ஓதுவார்களை நியமித்தால் எந்த ஆட்சேபனையும் எங்களுக்கு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.