திருச்சி- நாமக்கல் சாலையில் உள்ளது சிறுகாம்பூர். இந்த ஊரைச்சேர்ந்தவர் சுமதி(42). இவரது கணவர் ரவிக்குமார், சலவைத் தொழிலாளி. இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதனால் சுமதி திருச்சியில் உள்ள ஒரு ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் வாழ்மால்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து( 30) என்பவருடன் சுமதிக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
கணவன் உடல் நலம் பாதிக்கப்பட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டதால், கள்ளக்காதல் ஜோடிபல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர். இது சுமதியின் உறவினர்களுக்கு தெரிய வரவே, அவர்கள் சுமதியை கண்டித்துள்ளனர். இதனால் சுமதி, மாரிமுத்துவிடம் கள்ளத்தொடர்பை துண்டித்துக்கொள்ளலாம் என்று கூறி உள்ளார். அதன் பின்னர் மாரிமுத்து சுமதியை பார்க்க வந்தபோது அவர் பேச வில்லை. மேலும் மாரிமுத்துவின் செல்போன் அழைப்பையும் அவர் ஏற்கவில்லை.
கள்ளக்காதலி திடீரென கள்ளதொடர்பை துண்டித்துக்கொண்டதை மாரிமுத்துவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உனக்காக நான் என்னவெல்லாம் செய்திருக்கிறேன். என்னை வெறுத்து விட்டு வேறு யாருடனும் தொடர்பில் இருக்கிறாயா என சந்தேகப்பட்டார். இதனால் அவருக்கு சுமதி மீது ஆத்திரம் மேலும் அதிகரித்தது. கடந்த வாரம் சுமதியை சந்தித்து உல்லாசத்திற்கு அழைத்த போதும் சுமதி மறுத்து விட்டார். ஊராருக்கு தெரிந்து விட்டது. என் வாழ்க்கையை கெடுத்து விடாதே விட்டு விடு என கெஞ்சி உள்ளார். ஆனால் மாரிமுத்து அதை ஏற்கவில்லை. இந்த நிலையில் தன்னை வெறுத்த சுமதியை தீர்த்து கட்டவேண்டும் என்ற முடிவுடன் , இன்று காலை சிறுகாம்பூர் பேருந்து நி’றுத்தத்தில் கத்தியுடன் காத்திருந்தார்.
வேலைக்கு செல்வதற்காக அங்கு வந்த சுமதியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் கதறி துடித்த சுமதி தப்பித்து ஓடினார். ஆனாலும் விடாமல் விரட்டி சென்று மாரிமுத்து சரமாரி குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சுமதி அங்கேயே சரிந்து விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். திருச்சி-நாமக்கல் மெயின் ரோட்டில் இந்த கொடூர சம்பவம் நடந்தது. அப்போது பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்கு காத்திருந்தவர்கள் பயந்து நடுங்கி ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் சிலர் துணிந்து மாரிமுத்துவை சுற்றி வளைத்து பிடித்து தாக்கினர். பின்னர் வாத்தலை போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். போலீசார் மாரிமுத்துவை கைது செய்தனர். உயிருக்கு போராடிய சுமதியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் சுமதி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் திருச்சி , சிறுகாம்பூர் பகுதியில் பெருமை் பரபரப்பை ஏற்படுத்தி்உள்ளது.