Skip to content
Home » டீக்கடையில் காசுகொடுக்காமல் தகராறு……பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

டீக்கடையில் காசுகொடுக்காமல் தகராறு……பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி உட்பட 4 போலீசார் படப்பை அருகே உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்தனர். அதற்கான பணத்தை டீக்கடைக்காரர் கேட்டு உள்ளார். அப்போது இன்ஸ்பெக்டருடன் வந்த போலீசார்  எங்களிடமே காசு கேட்கிறாயா என தகராறு செய்து டீக்கடைக்காரரை மிரட்டி விட்டு காசு கொடுக்காமலேயே போய் விட்டனர். இதுபற்றி டீக்கடைக்காரர் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி உள்பட 4 போலீசாரையும்   சஸ்பெண்ட் செய்து தாம்பரம்  போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!