கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் அங்குள்ள ஆர்.ஜி கர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை மாநில போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த ஐகோர்ட், பெண் மருத்துவகர் கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது உடனடியாக சிபிஐ வசம் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே ஒருவரை மாநில போலீசார் கைது செய்தனர்.
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு….. சிபிஐக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு
- by Authour
