தமிழக சட்டமன்றத்தில் இன்று நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரை தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
நடப்பாண்டிலும் சர்வதேச புத்தக கண்காட்சி நடத்தப்படும். வரும் ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்தப்படும்.
மருத்துவ துறைக்கு ரூ. 18,661 கோடி ஒதுக்கப்படும்.
4, மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஆண்டில் காலை சிற்றுகண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும். பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகள் அனைத்தும் கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும்.
குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் 1000 மாணவர்களுக்கு உதவ ரூ.10 கோடி ஒதுக்கப்படும். இதன் மூலம் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
உயர் கல்வித்துறைக்கு ரூ.6,967 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
மதுரையில் உருவாகும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் வரும் ஜூன் மாதம் முதல் வாசகர்களை வரவேற்கும்.(ஜூனில் திறப்பு விழா)
பள்ளிக்கல்வித்துறைக்கு 40,290 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
25 இடங்களில் நாட்டுப்புற கலை பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும்.சென்னை அம்பத்தூரில் ரூ.120 கோடியில் இளைஞர்கள் திறன் மேம்பாட்டு மையம் ஏற்படுத்தப்படும்.
பாளை சித்தமருத்துவ கல்லூரிக்கு ரூ.40 கோடி ஒதுக்கப்படுகிறது. அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டை சேர்ந்த படை வீரர்கள் குடும்ப நல கருணைத்தொகை இரு மடங்காக உயரும்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் ரூ.25 கோடியில் சீரமைக்கப்படும்.
முதல்வரின் பள்ளிக்குழந்தைகள் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும்.
சர்வதேச தரத்திலான விளையாட்டு மையம் சென்னையில் அமைக்கப்படும்.
திருச்சி, மதுரை, கோவை, நீலகிரி ஆகிய இடங்களில் ரூ.100 கோடியில் ஆதிதிராவிட மாணவர்களுக்கான விடுதிகள்கட்டப்படும்.
மாற்றத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1444 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பிற்பட்டோர் நலத்துறைக்கு 1580 கோடி ஒதுக்கப்படுகிறது.
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மூலம் பள்ளிக்கு மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. எனவே காலை உணவு திட்டம் விரிவாக்கத்துக்குரூ. 500 கோடி ஒதுக்கப்படுகிறது.
இளைஞர்களுக்கு தொழிற் பயிற்சி அளிக்க ரூ.25 கோடியில் திட்டம் .
ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 3,513 கோடி ஒதுக்கீடு.
மகளிர் சுய உயதவிக்குழு கடன் இலக்கு ரூ.30ஆயிரம் கோடி.
கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி ரூ.2 ஆயிரமாக அதிகரிப்பு.
மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தால், உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 29% அதிகரிப்பு.
ரேஷன் மானியத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு.
விவசாய கடன் தள்ளுபடிக்கு ரூ.2,393 கோடி ஒதுக்கப்படுகிறது.
புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள்கட்ட ரூ.1500 கோடி ஒதுக்கப்படும்.
உணவு, கூட்டுறவுத்துறைக்க ரூ.16,262 கோடி ஒதுக்கீடு.
உலக செம்மொழி மாநாடு கோவையில் 2010ல் நடத்தப்பட்டபோது செம்மொழிப்பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த திட்டம் ரூ.172 கோடியில் 2 கட்டங்களாக செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக 45 ஏக்கர் பரப்பில் இது உருவாக்கப்படும்.
கிராப்புறங்களில் 10 ஆயிரம் குளம், ஊரணிகள் ரூ.800 கோடியில் சீரமைக்கப்படும்.
புதிரை வண்ணார் நலவாரியத்துக்கு புத்துயிர் அளிக்க ரூ.10 கோடி வழங்கப்படும்.
கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்திற்க 2 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். அந்தியூரில் தந்தை பெரியார் பெயரில் 80,567 ஹெக்டேரில் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும்.
விழுப்புரம் மாவட்டம் மரணக்காணத்தில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும்.
சென்னை தீவுத்திடலில் திறந்தவெளி தியேட்டர் அமைக்கப்படும். வடசென்னையை 3 ஆண்டில் வளர்ச்சிப்படுத்த ரூ.1000 கோடியில் திட்டம்.
ஊரக வளர்ச்சித்துறைக்க 22, 562 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
செயற்கை பவளப்பாறைகள் அமைக்க ரூ.79 கோடி ஒதுக்கீடு.
சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த ரூ.8,500 கோடிஒதுக்கீடு. கோவையில் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு 9,5000 கோடி ஒதுக்கீடு.
அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழி மேம்பாலம் ரூ.621 கோடியில் அமைக்கப்படும்.
புதிய பஸ்கள் வாங்க, புதுப்பிக்க ரூ.500 கோடி ஒதுக்கப்படுகிறது.
கூவம், அடையாறு சீரமைக்க ரூ.50 கோடியில் திட்டம்.
மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துக்காக ரூ.2,800 கோடி ஒதுக்கீடு.
நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு ரூ.24,476 கோடி ஒதுக்கீடு.
ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.22, 562 கோடி ஒதுக்கீடு. சேலத்தில் ரூ.880 கோடியில் ஜவுளி பூங்கா ஏற்படுத்தப்படும்.
கள்ளக்குறிச் கோவை, உள்ளிட்ட 4 இடங்களில் புதிய ரூ.410 கோடியில் சிப்காட் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் 22 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.
15 புதிய மின் திட்டங்கள் ரூ.77ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படும்.
சென்னை, தாம்பரம், திருச்சி, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட 7 மாநகராட்சி முக்கிய இடங்களில் இலவச வைபை சேவை அளிக்கப்படும்.
நாகூர் தர்காவை புதுப்பிக்க ரூ.2 கோடியும், தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.6 கோடியும் ஒதுக்கப்படும்.
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டம் 35.8 லட்சம் பேர் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்படுகிறது. இதற்காக ரூ.5,535 கோடி ஒதுக்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள் வீடு கட்ட கடன் தொகை ரூ.50 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
பெண்கள் சமூகத்தில் சரிபாதியாக உள்ளனர். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவோம் என அறிவித்திருந்தோம். சொன்னதை மட்டும் அல்ல., சொல்லாததையும் செய்துள்ளோம். புதுமையான பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் நமது முதல்வர், தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு வரும் நிதி ஆண்டில் இருந்து மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கிறேன். மேலும் 58 லட்சம் பேர் இதன் மூலம் பயன் பெறுவர் . அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் இந்த திட்டம் முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. புரட்சியை ஏற்படுத்தும் இந்த திட்டத்திற்காக ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அமைச்சர் பட்ஜெட் உரை படித்தார்.