ராஜஸ்தானில் ‘தேவஸ்தான்’ எனும் பெயரில் அறநிலையத்துறை அமைச்சகம் செயல்படுகிறது. இதன் கீழ் மாநிலம் முழுவதிலும் பல பழமையான கோயில்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் அரசால் 17 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த 17 பேரில் 8 பெண்கள், தலித், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் முதல் முறையாக பெண்கள், பட்டியல் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு ராஜஸ்தானின் ஒரு பிரிவினர் இடையே புதிய நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
