நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கரூர் அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலய பராமரிப்பு பணிகள் நடைபெற்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று அதி காலை 5 .15 மணி முதல் 6.15 மணிக்குள் விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த தீர்த்தம் மற்றும் முளைப்பாரி கொண்டுவரும் நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் வண்ண சீருடை அணிந்து வெங்கமேடு காமாட்சியம்மன் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதியில் வழியாக காமாட்சி அம்மன் ஆலயம் வந்தடைந்தனர்.
அதன் தொடர்ச்சியாக இரவு ஆலயம் எதிரே செங்குந்தர் கும்மியாட்டம் நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் வண்ண உடைய அணிந்து கும்மியாட்டத்தை சிறப்பாக நடத்தினர்.
இந்த கும்மியாட்டத்தில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை தங்களது பாரம்பரிய கும்மியாட்டத்தை ஆடினர்.