அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உத்திரக்குடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த தவசிநாதன் மகன் தமிழ்கலவன். (21) இவர் தனியார் கம்பெனி ஒன்றில் சேல்ஸ்மேன் ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று இரவு ஜெயங்கொண்டம் தியேட்டர் ஒன்றில் இரண்டாவது காட்சி படம் பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக கழுவந்தோண்டி தனியார் சோப்பு கம்பெனி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகன மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி விசாரித்து வருகின்றனர். அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயங்கொண்டம் அருகே வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி…
- by Authour
