Skip to content

கூலித்தொழிலாளி தற்கொலை…வயர் திருடிய வாலிபர் கைது…. திருச்சி க்ரைம்..

  • by Authour

கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை…

திருச்சி மேல சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.இந்த நிலையில் செந்தில்குமார்
குடும்ப தகராறு காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக மனைவி, பிள்ளைகளை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 15ந் தேதி வீட்டில் தனியாக இருந்த செந்தில்குமார் மன உளைச்சலில் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.
இனதயடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை ஆபத்தான நிலையில் திருச்ச அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தூங்கிக் கொண்டு இருந்த கூலி தொழிலாளர் மீது வாகன மோதி சாவு 

திருச்சி மாவட்டம் லால்குடி மணக்கல் பகுதியை சேர்ந்தவர் பாலு. கூலி தொழிலாளியான இவர் தனது நண்பர் கார்த்திக் என்பவரிடம் ராஜீவ் காந்தி நகரில் உள்ள அறையில் தங்கி உள்ளார்.இந்த நிலையில் நேற்று எடமலைப்பட்டிபுதூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள தனியார் டைல்ஸ் கடை அருகில் பாலு தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஏறி தலையில் பலத்த காயமடைந்து பரிதாபமாக இறந்தார் இச்சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை  செய்து வருகின்றனர்.

கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

திருச்சி மேல சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் ( 41) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.இந்த நிலையில் செந்தில்குமார் குடும்ப தகராறு காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக மனைவி, பிள்ளைகளை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 15ந் தேதி வீட்டில் தனியாக இருந்த செந்தில்குமார் மன உளைச்சலில் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இனதயடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை ஆபத்தான நிலையில் திருச்ச அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தனியார் நிறுவனத்தில் புகுந்து வயர் திருடிய வாலிபர் கைது

ஸ்ரீரங்கம், புலி மண்டபம் ரோடு ராயர் தோப்பு பகுதியில் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் கடந்த 16 ந்தேதி ஒரு வாலிபர் உள்ளே புகுந்து அங்கிருந்த 5 அடி காப்பர் வயரை திருடி கொண்ட செல்ல முயன்றார். அப்பொழுது அந்த கம்பெனியின் உரிமையாளர் ரமேஷ் பரத்ராஜ் என்பவர் பார்த்து உடனடியாக திருவரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து திருவரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபர்ரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் பெயர் மதன்குமார் ( 20) சஅம்மா மண்டப ரோடு பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மதன்குமாரை கைது செய்துள்ளனர்.
உறையூரில்

கார் மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 34)இவர் தனது நண்பர் திருவாரூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த சரவணகுமார் (வயது 40) என்பவரிடம் காரை மூன்று நாட்கள் தாருங்கள் என்று கேட்டு க வாங்கிவிட்டு திருப்பி தரவில்லை. இதே போன்று மற்றொரு நண்பர்கள் திருவறும்பூர்ரை சேர்ந்த கணேசன் மற்றும் உறையூர் பகுதியை சேர்ந்த விஜய் ஆகியோரின் கார்களையும் வாங்கிக்கொண்டு அதனை திருப்பித் தராமல் ஏமாற்றியுள்ள இது தொடர்பாக மூன்று பேரும் தனித்தனியாக உறையூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து வசந்தகுமாரை கைது செய்து உள்ளனர்.

பாலக்கரையில் போதை மாத்திரை கடத்திய 4 பேர் கைது

திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாரக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் முதலியார் சத்திரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது 2 டூவீலர்களில் 6 பேர் அந்த வழியாக வந்தனர். போலீசாரை பார்த்தவுடன் அவர்களின் சிலர் பயந்து கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். இதையடுத்து பிடிபட்ட நான்கு பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்தபோது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த கவி பாரதி (  24 )பிரகாஷ்வரன் (  22) அரியமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் ( 25 )முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்த தெய்வம் ( 30)எ ன தெரியவந்தது. மேலும் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்தபோது போதை மாத்திரையை விற்க கொண்டு வந்ததை ஒப்புக்கொண்டனர்.இதையடுத்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்துள்ளனர். தப்பி ஓடிய இரண்டு பேரை தேடி வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து 150 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட 4 பேர் போதை மாத்திரைகளை யாரிடம் வாங்கி கடத்தி வந்தனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!