கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…
திருச்சி பெரிய மிளகு பாறை கள்ளர் தெருவை சேர்ந்தவர் ஞானகுமார் ( 56. )கூலித் தொழிலாளி. இவர் குடி போதைக்கு அடிமையானவர். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் மனைவியின் சேலையில் ஞானகுமார் தூக்குப் மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்து அவரது மனைவி தமிழ்ச்செல்வி அதிர்ச்சி அடைந்து இந்த சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஞானகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
காவேரி ஆற்றில் மூழ்கி கொத்தனார் பலி…
திருச்சி திருவானைக்காவல் சீனிவாச நகர் 4வது தெருவை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (41). கொத்தனார்வேலை செய்து வந்தார்.இந்நிலையில் இவர் தனது நண்பருடன் காவேரி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அப்பொழுது அவருடன் வந்த நண்பர் ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில் பொன்னுச்சாமி காவிரி ஆற்றில் இறங்கி குளித்தார். அப்பொழுது பொன்னுச்சாமி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி பொன்னுச்சாமி உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.