உடல் நலக்குறைவு காரணமாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 96. டில்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் அத்வானிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தொடர்ந்து அவரை எய்ம்ஸ் முதியோர் பிரிவு டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.