தெற்கு குவைத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று காலை 6 மணிக்கு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அந்த கட்டிடத்தில் தங்கியிருந்த 41 பேர் பலியானார்கள். இவர்களில் 2 பேர் தமிழர்கள். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் கேரளாவை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமானதாகும். விபத்தில் தீக்காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமையும் மோசமாக உள்ளது.