குவைத் கட்டிடத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் பலியானார்கள். இவர்களில்பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்று கூறப்பட்டது. இறந்தவர்களில் 24 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும், 7 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் தற்போது தெரியவந்துள்ளது. திருவெறும்பூரை சேர்ந்த எபினேசர் உள்பட 2 பேர், சீர்காழி சின்னதுரை, தஞ்சை ரிச்சர்டு, ராமநாதபுரம் கருப்பண்ணன் ராமு, கோவில்பட்டியை சேர்ந்த மாரிமுத்து ஆகியோர் பலியானதாக தற்போது தெரியவந்துள்ளது.
இவர்களது உடல்களை கண்டுபிடித்து தமிழகம் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.