தமிழகத்தில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கி, சென்னை ஐகோர்ட் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளது.
இது தொடர்பாக திருவாரூரில் இன்று தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், தமிழகத்தில் குட்கா விற்பனையை தடுக்க கடந்த அதிமுக அரசை விட, இந்த அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பான்மசாலா, குட்கா விற்பனைக்கான தடையை உயர்நீதிமன்றம் நீக்கி உள்ளது. இதை எதிர்த்து முதல்வரின் ஆலோசனையின் பேரில், சட்ட வல்லுநர்களை ஆலோசித்து மாநில சுகாதார துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும். மாவட்டத்துக்கு ஒரு நர்சிங் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.