குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படும். இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாதததால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இப்படி தண்ணீர் திறக்கப்படாத காலங்களில் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டங்கள் அறிவிக்கப்படும்.
அதன்படி இந்த ஆண்டு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்திற்காக ரூ.78.67 கோடி முதல்வர் அறிவித்துள்ளார். இதன் மூலம் விவசாயிகளுக்கு விதை மானியம், உர மானியம், உழவு மானியம், ஆகியவை வழங்கப்படும். இந்த ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.