தமிழக அரசு அறிவித்த குறுவைத் தொகுப்பு திட்டம் ,எந்திர சாகுபடி செய்த விவசாயிகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. மனிதர்கள் மூலம் நடவு செய்த விவசாயிகளுக்கும் இதனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமார் தலைமையில் விவசாயிகள் கலெக்டர் அலுவலக வாயிலில் படுத்து உருண்டு நூதன போராட்டம் நடத்தினர்.
டெல்டா மாவட்டத்தில் குறுவைக்கான நடவு மானியத்தை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சக்திவேல், கண்ணன், ஜெயபால், கண்ணப்பன், பழனிவேல், முருகானந்தம் மற்றும் பஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். தொடர்ந்து போலீசார் விவசாயிகளை சமாதானப்படுத்தி மனு கொடுக்க அறிவுறுத்தினர். தொடர்ந்து விவசாயிகள் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜனிடம் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி் மனு அளித்தனர்.