மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் துவங்கியது. அப்போது காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுப்படி தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத பாஜக அரசை கண்டித்தும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்தின் உரிமையை பறிப்பதாகவும், காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத காங்கிரஸ் அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரிய உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் முழக்கமிட்டவாறு கூட்டரங்கு வாயிலுக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திவிட்டு மீண்டும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில்’ பங்கேற்றனர்.
குறைதீர் நாள் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..
- by Authour
