தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆணைக்கிணங்க கூடுதல் ஆசிரியர் ஸ்ரீகாந்த் உத்தரவின் பேரில் மாதத்தின் முதல் திங்கள் கிழமை தோறும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள குப்பைகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குப்பைகள் அகற்றும் பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார் பார்வையிட்டார் இந்த ஆய்வின்போது வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் மகாராஜா சுகாதார உறுப்பினர் நித்திய விஜி ஊராட்சி செயலாளர் சக்திவேல் தூய்மை பணியாளர் மேற்பார்வையாளர் பாலாம்பிகை மற்றும் துப்புரவு பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் பணிகளை மேற்கொண்டனர்.