Skip to content

தவறவிட்ட செல்போனை ஒரு மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த போலீசார்…

பெரம்பலூர் மாவட்டம்,மெயின்ரோடு, பெரியம்மாபாளையம், குன்னம் வட்டவசிப்பவர்  இளையராஜா த/பெ ராமர். இவர் இன்று 15.3.2024 மதியம் 3 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் பெரியம்மாபாளையத்திலிருந்து குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் போது தனது செல்போனை தவற விட்டுள்ளார்.

மேற்படி அந்த நபர் குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் குன்னம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் முதல் நிலை பெண் காவலர் அமராவதி ஆகியோர்கள் கொண்ட குழுவினர் உடனடியாக தேடுதல் வேட்டை நடத்தி அந்த செல்போனில் இருப்பிடத்தை வைத்து ஆராய்ந்ததில் பெரியம்மாபாளையத்திலிருந்து குன்னம் செல்லும் சாலையில் அழகு தம்பி என்பவரின் காட்டின் அருகே கிடந்தது தெரியவந்ததின் பேரில் செல்போனை கண்டுபிடித்து செல்போன் உரிமையாளரிடம் மாலை 4 மணிக்கு நல்ல முறையில் ஒப்படைக்கப்பட்டது.

இச்செய்தியறிந்த பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி அதனை உரியவரிடம் ஒப்படைத்த மாவட்ட காவல்துறையினரை வெகுவாக பாராட்டினார்களள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!