Skip to content
Home » தஞ்சை அருகே கூட்டுபாலியல் வழக்கில் 3 பேர் குண்டாசில் அடைப்பு..

தஞ்சை அருகே கூட்டுபாலியல் வழக்கில் 3 பேர் குண்டாசில் அடைப்பு..

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு உட்கோட்டம், ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 12.08.2024 அன்று, பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையின் அடிப்படையில் கூட்டு பாலியல் வன்புணர்ச்சி செய்த கவி (எ) கவிதாசன், திவாகர், பிரவீன், வேல்முருகன் ஆகியோரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும், இளம்பிழை குற்றவாளிகளான லீயோதர்ஷன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோரை கையகப்படுத்தி தஞ்சாவூர் இளம்சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

மேற்படி வழக்கில் கைது செய்யப்பட்ட பாப்பாநாடு, மேலத்தெருவைச் சேர்ந்த கவி (எ) கவிதாசன், மற்றும் திவாகர்,பாப்பாநாடு, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பிரவீன் ஆகியோர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டி, ஒரத்தநாடு காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையம் சுதா வேண்டுகோளின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டதின் பேரில் மேற்படி கூட்டு பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!