கும்பகோணம் – தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசம் அடுத்த திருப்பாலைத் துறையில் அமைந்துள்ள அருள்மிகு பாலைவன நாதர் சுவாமி திருக்கோயில். சுவாமி, அம்பாள் திருமணக் கோலத்தில் உள்ள தலம். திருநாவுக்கரசரால் பால் பெற்ற தலம். இக்கோயில் பிரகாரத்தில் உள்ள நெற் களஞ்சியம் ஆசியாவிலேயே பெரிய நெற் களஞ்சியமாகும். தஞ்சை நாயக்க மன்னர்களின் வழி வந்த ரகுநாத நாயக்கரால் (கி.பி 1600 – 1634 ) கட்டப்பட்டது. 36 அடி உயரம் கொண்ட களஞ்சியத்தில் அடிப்பகுதி வட்ட வடிவிலும், மேல் பகுதி கூம்பு வடிவிலும் அமைந்துள்ளது. மேல் பகுதி, நடு பகுதி, கீழ் பகுதிகளில் மூன்று வாயில்களைக் கொண்டது. இதில் 3,000 கலம் தானியத்தை சேமிக்கலாம்.
Tags:பாபநாசம்