Skip to content
Home » கும்பகோணம் கோவில் குளங்களில் ஆக்கிரமிப்பு… ஐகோர்ட் அதிரடி உத்தரவு….

கும்பகோணம் கோவில் குளங்களில் ஆக்கிரமிப்பு… ஐகோர்ட் அதிரடி உத்தரவு….

  • by Senthil

கும்பகோணத்தில் உள்ள பொற்தாமரை குளம்  உள்ளிட்ட 44 குளங்கள், அதற்கு நீர் செல்லக்கூடிய 11 வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2018 ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை அமல்படுத்தப்படவில்லை என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தஞ்சை மாவட்ட ஆட்சியர் வழங்கிய கடிதம் ஒன்றை அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

அந்த கடித்ததை படித்த நீதிபதிகள், மாவட்ட ஆட்சியரின் கடிதம் தங்களை திடுக்கிட வைக்கும் வகையில் இருப்பதாக கூறி கடும் அதிருப்தி தெரிவித்தனர்.  மாற்று இடம் வழங்கப்பட்டு அதன்  பின்னர் தான் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததில் இருந்து அவர் மாவட்ட ஆட்சியராக இருக்க தகுதியானவர் இல்லை என தெளிவாகிறது என கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து கும்பகோணம் கோவில் குளங்கள் மற்றும் அதற்கு நீர் செல்லும் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அனைத்தையும் 12 வாரத்தில் அகற்ற தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆக்கிரமிப்புகளை வரும் அக்டோபர் 28 ம் தேதிக்குள் அகற்றாவிட்டால் தஞ்சை  மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக வேண்டும் என கெடு விதித்து உத்தரவிட்டு வழக்கின் விசாரணை அக்டோபர் 28 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!