தஞ்சை மாவட்டம், கும்பகோணம் ஶ்ரீ சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் தைப் பொங்கல் பெருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை கொடியேற்றும் நடைபெற்றது. வைணவத் தலங்களில் மூன்றாவது திவ்ய
தேசமாகவும் , ஏழு ஆழ்வார்களால் பாடல் பெற்றதும், நாலாயிர திவ்யப் பிரபந்தம் எனும் பாடல் தொகுப்பு அறியப்பட்டதுமான உள்ளிட்ட சிறப்புகளைக் கொண்ட கோயிலின் ராஜ கோபுரம் தமிழகத்தின் மூன்றாவது
உயரமான கோபுரமாகும். இதன் சித்திரை பெரிய தேர் தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் ஆகும். கொடியேற்றத்தின் தொடர்ச்சியாக 10 ந் தேதி இரவு வெள்ளி கருட வாகன புறப்பாடு, முக்கிய நிகழ்வான தேரோட்டம் 15 ந் தேதி காலை தைப் பொங்கலன்று நடைபெறுகிறது. தொடர்ந்து 10 மணிக்கு தீர்த்தவாரி,
11மணிக்கு மேல் 12மணிக்குள்ளாக உத்ராயணவாசல் திறப்பு நடைபெறுகிறது. 16 ந் தேதி இரவு 7 மணிக்கு
கணு உற்சவம், கோமளவல்லித்தாயார் உள் வீதி புறப்பாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம், மண்டகப்படி தாரர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.