கும்பகோணத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முழு அளவு வெண்கல சிலையை நிறுவுவது, சிலை அமைப்பு தலைவர் மற்றும் பொருளாளராக வெங்கடேஷ், துணைத்தலைவராக சுவாமிமலை ராமலிங்க ஸ்தபதி, செயலாளராக மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஐயப்பன், துணை செயலாளர்களாக பாலு காடுவெட்டியார் மற்றும் சேட்டு மோகன் ஆகியோர் தேர்வு செய்வது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சிவாஜியின் விசுவாசியான இ.வி.கே.எஸ் இளங்கோகோவனுக்கும், தமிழ்நாடு முதல்வருக்கும், வெற்றிக்கு உழைத்த கூட்டணி கட்சியினருக்கும் கூட்டத்தின் வாயிலாக நன்றி தெரிவிப்பது, கடந்த 1979ல் கும்பகோணம் பழைய பாலக்கரையில் நிறுவப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் சிலையை முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி திறந்ததை போல விரைவில் அமைய உள்ள சிவாஜி கணேசனின் சிலையை திறப்பதற்கு இந்திரா காந்தியின் பேரன் ராகுல் காந்தி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை அழைப்பது என்பன ஆகும். கூட்டத்தில் தீர்மானங்களை விளக்கி சீனி நலங்கிள்ளி, குடந்தை குரு, பாலாஜி, சங்கர், ஐயப்பன், சுரேஷ் மற்றும் பாஸ்கர் ஆகியோர் பேசினர்.