தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரில் இன்று காலை திடீரென மழை பெய்தது. 8.15 மணிக்கு பலமாக பெய்த மழை 10 நிமிடத்தில் வேகத்தை குறைத்துக்கொண்டது. இதனால் காலையில் பணிக்கு செல்பவர்கள், மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். 8.45 மணி வரை நசநசவென மழை தூறிக்கொண்டே இருந்தது. அதன் பின்னர் மழை ஓய்ந்தது. திருச்சியில் காலை 8 மணிக்கு வெயில் வழக்கம்போல சுட்டெரிக்க தொடங்கியது. 10 மணிக்கு பின்னர் வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டம் காணப்பட்டது.