தஞ்சாவூர் மாவட்டம் , பாபநாசம் அருகே திருப்பாலத்துறை கல்லூரி மாணவர்களுக்கு இணையாக தனியார் பள்ளியில் யூகேஜி முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னதாக, பட்டம் பெரும் குழந்தைகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை ஆசிரியர்கள் அனைவரும் வரவேற்று விழா மேடைக்கு அழைத்து வந்தனர். நிகழ்ச்சியில் நிர்வாக குழு இயக்குனர் சித்தார்த்தன் அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளி தலைமையாசிரியை செல்வி சிவக்குமார் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி அறிமுக
உரையாற்றினார். ரோட்டரி சங்க முன்னாள் மாவட்ட கவர்னர் ரமேஷ்பாபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு யுகேஜியிலிருந்து ஒன்றாம் வகுப்பு செல்லும் 40 குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார். பள்ளி தாளாளர் ஜெயந்தி சித்தார்த்தன், பள்ளி நிர்வாகக் குழு இயக்குனர் ஹாஜாமைதீன், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் பூபதிராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ரோட்டரியன் பக்ருதீன், ராஜா, பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியை கற்பக செல்வி நன்றி கூறினார்.