Skip to content
Home » மாசிமகம்…. குடந்தை மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடல்

மாசிமகம்…. குடந்தை மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடல்

இன்ற  மாசி மகம்.  மாசி மாதம் பௌர்ணமியும் மகம் திதியும் சேர்த்து வரக்கூடிய அற்புத நாள் மாசி மகம் என்று அழைக்கப்படுகிறது.இன்றைய தினம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள  மகாமக குளத்தில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மாசி மக திருவிழாவை முன்னிட்டு சிவன் கோவில்களில் 10 நாள் உற்சவம் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான மாசி மக தீர்த்தவாரி, மகாமக குளத்தில் இன்று  நடைபெற்றது.

மாசி மாதம் சிவபெருமானுக்கு மட்டுமின்றி பெருமாளுக்கும் உகந்ததாகப் பார்க்கப்படுகிறது. வைணவர்கள் மாசி மாதம் முழுக்க அதிகாலையில் எழுந்து குளித்து, துளசியால் பெருமாளை வழிபட்டு வந்தால் அவர்களுக்கு வைகுண்ட லோகத்தை அடையும் வரம் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. பிற தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் மகிமையாகும்.

கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சரயு, வேகவதி, சிந்து, கோதாவரி, காவேரி, தபதி, பிரம்மபுத்திரா, தாமிரபரணி, மகாநதி முதலான நதிகள் கைலாயம் சென்று பரமேஸ்வரனை வணங்கி மக்களின் பாவங்களை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம். எங்களிடம் வரும் பாவத்தை எப்படி தொலைப்போம் என கேட்டனர். அதற்கு பரமசிவன் நதிகளே! மகத்தன்று குடந்தையில் உள்ள மகாமக தீர்த்தத்தில் ஸ்நானம் செய்யுங்கள் என்றாராம்.

அதன்படிபன்னிரெண்டு நதிகளும் மக்கள் செய்த பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற மகாமக குளத்தில் நீராடுவதாக ஐதீகம்.

விழாவின் முக்கிய நிகழ்வான மாசி மக தீர்த்தவாரி, மகாமக குளத்தில் இன்று நடைபெறுவதை யொட்டி ஏராளமானோர் கும்பகோணம் நகரத்தில் குவிந்தனா்.இன்று காலை 9 மணிக்கு மேல் 9.15 மணிக்குள் சக்கரபாணி, ராஜகோபால சுவாமி, ஆதி வராகப் பெருமாள் ஆகிய 3 பெருமாள் கோயில்களின் தேரோட்டமும் நடைபெற்றது. பின்னர், சாரங்கபாணி கோயில் பொற்றாமரைக் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இவ்விழாவில் தொடர்புடைய 12 சிவன் கோயில்களிலிருந்து காலை 10 மணிக்கு சுவாமிகள் புறப்பட்டு மகாமக குளத்தைச் சுற்றி வலம் வந்து கரையில் நிறுத்தபட்டனர். தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் 12.45 மணிக்குள் குளத்தில் அஸ்ரத்தேவருக்கு அபிஷேகமும் தீர்த்தவாரியும் நடைபெறும்கிறது. மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் நகரில் உள்ள சிவன், பெருமாள் கோவில்கள் மட்டுமின்றி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு கோவில்களில் நடைபெற்று வரும் பல்வேறு சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கும்பகோணம் மகாமக குளத்தில் மாசி மகத்தை ஒட்டி ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *