Skip to content
Home » கும்பகோணம் மகாமகக் குளத்திலிருந்து 21 ஆறுகளின் புனித நீா் அடங்கிய கடங்கள் புறப்பாடு…

கும்பகோணம் மகாமகக் குளத்திலிருந்து 21 ஆறுகளின் புனித நீா் அடங்கிய கடங்கள் புறப்பாடு…

  • by Senthil

அயோத்தி ராமா் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக கும்பகோணம் மகாமகக் குளத்திலிருந்து 21 ஆறுகளின் புனித நீா் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடந்தது. அயோத்தியில் கட்டப்படும் ராமா் கோயில் குடமுழுக்கு 2024, ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறும் என ராம ஜென்ம பூமி அறக்கட்டளை நிா்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக கங்கை, யமுனை, பிரம்மபுத்ரா, காவிரி உள்பட பல்வேறு பகுதிகளிலுள்ள 21 நதிகளிலிருந்து புனித நீா் 3 கடங்களில் சேகரிக்கப்பட்டுள்ளன.

கும்பகோணம் காசி விஸ்வநாதா் கோயிலில் இந்தக் கடங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மகாமக குளத்திலிருந்து புறப்பாடு நடைபெற்றது. சூரியனாா்கோவில் வாமதேவ சந்தானம் சிவாக்கிர யோகிகள் ஆதீனம் 28 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், கும்பகோணம் மேயா் க. சரவணன் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு, கடங்கள் புறப்பாட்டை தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில் சிவசேனா கட்சி தஞ்சாவூா் கோட்டத் தலைவா் சிவகுமாா் தலைமையில் அகில பாரத இந்து ஆன்மிக பேரவையின் மாநிலப் பொதுச் செயலா் இரா. கண்ணன், அனுமன் சேனா நகரத் தலைவா் பிரபாகரன், ஒன்றியத் தலைவா் அருணகிரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். புனிதநீா் யாத்திரை குழுவின் தலைவரும், இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநிலப் பொதுச் செயலருமான கா. பாலா கூறுகையில், 21 நதிகளிலிருந்து புனித நீா் எடுத்து வரப்பட்டு, காசி விஸ்வநாதா் கோயிலிலும், மகாமக குளத்திலும் பூஜைகள் செய்யப்பட்டு, புறப்பாட்டை தொடங்கியுள்ளோம்.

தொடா்ந்து ராமேசுவரத்துக்கு சென்று, அக்கோயிலில் புனித நீா் கடத்துக்கு பூஜை செய்யப்படும். அங்கிருந்து ரயில் மூலம் அயோத்திக்கு சென்று, ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிா்வாகிகளிடம் ஒப்படைக்கவுள்ளோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!