தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் புவியியல் துறை உதவி பேராசிரியராக இருப்பவர் வடிவேல். இவர் மீது மாணவர்கள் அளித்த புகாரைத்தொடர்ந்து கடந்த ஆண்டு இவர் திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், அவர் இன்று மீண்டும் பிணியிட மாற்றம் பெற்று குடந்தை அரசு கல்லூரிக்கே வந்தார். இதையறிந்த புவியியல் துறை முதலாமாண்டு மாணவர்கள் , சுமார் 50 பேர் கல்லூரியின் பிரதான வாயிலில், சாதி வெறி பிடித்த வடிவேலுவை, அனுமதிக்கமாட்டோம், அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோஷம்போட்டு திடீர் போராட்டத்தில் குதித்தனர்.
தகவலறிந்த டிஎஸ்பி பி.மகேஸ்குமார் மற்றும் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, பேராசிரியர் மீது புகார் அளித்தனர்.
இது குறித்து கல்லூரி முதல்வர் என்.தனராஜனிடம் கேட்டபோது,
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம், அரசு ஆணையின் படி வடிவேல் பணிக்கு வந்துள்ளார். அவர் மீது குற்றம் நிரூபிக்காததால், அவருக்கு இங்கு பணி வழங்கியுள்ளனர். எனவே போராட்டம் வேண்டாம் என கேட்டுக்கொண்டேன். மாணவர்கள் வகுப்பறைக்குச் சென்றனர் என்றார்.