கும்பகோணம் அசூர் பகுதியில் மாியன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தங்கியிருந்து பங்கு குரு பெர்ணான்டஸ் உதவி பங்கு குரு பிரான்ஸ்சிஸ் சேவியர், ஆலய பொருளாளர் டேவிட் ஆகியோர் மக்களுக்கு சேவை பணியாற்றி வருகின்றனர். ஆலயத்தின் பங்கு குரு வழக்கம் போல் நடைபயிற்சிக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் ஆலயத்தின் 2 கதவுகள் தீ வைக்கப்பட்டு, உள்ளே இருந்த ரூ. 60 ஆயிரம் பணம் திருட்டுப் போனது .
இது தொடர்பாக பெர்னாண்டஸ், தாலுகா காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில்,போலீஸார் வழக்குப் பதிந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டதில், இந்த ஆலயத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருபவரின் உறவினரான ஆட்டோ நகரைச் சேர்ந்த அடைக்கலசாமி மகன் அனிஷ்குமார் (26) என்பவர், இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர், அவரைப் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
போலீஸார் விசாரணையில், அனிஷ் குமாரை, தஞ்சாவூரில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் ஓட்டுநர் பணிக்கு ஆலயப் பொருளாளர் டேவிட் சேர்த்துள்ளார். அங்கு, ரூ. 2.50 லட்சம் பணத்தை, அனீஷ்குமார் திருடியதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த, அந்த நிர்வாகம், அவரை கடந்த மாதம் பணி நீக்கம் செய்தனர்.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், மரியன்னை ஆலயத்தை தீ வைத்து அங்கிருந்த ரொக்கத்தைத் திருடி உள்ளார் எனத் தெரிவித்தனர்.