தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில் உள்ள சிறிய கடையில் தீ விபத்து ஏற்பட்டு கோகிலா (33) என்ற பெண் உயிரிழந்தார். சார்ஜ் போட்டுக்கொண்டே போனில் பேசிக்கொண்டிருந்தததால் விபத்து நேர்ந்ததாக தெரிகிறது. பலத்த தீக்காயங்களுடன் கோகிலா(33) என்பவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் கடை நடத்திவரும் கோகிலாவின் முகத்தின் அருகிலேயே போன் வெடித்ததில் அப்பெண் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செல்போனை சார்ஜ் செய்யும்போது அதிக வெப்பமாவதால் வெடிக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
