Skip to content
Home » கும்பகோணம் கோட்டத்தில் இருந்து 300 சிறப்பு பஸ்கள் இயக்கம்…. அதிகாரி தகவல்

கும்பகோணம் கோட்டத்தில் இருந்து 300 சிறப்பு பஸ்கள் இயக்கம்…. அதிகாரி தகவல்

  • by Authour

கும்பகோணம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக  மேலாண் இயக்குநர் R.மோகன் கூறியதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்ப)லிட்., கும்பகோணம் சார்பில், 21.10.2023, 22.10.2023, வார விடுமுறை, 23.10.2023 ஆயுத பூஜை, 24.10.2023 விஜய தசமி என தொடர் விடுமுறையையொட்டி, சென்னையிலிருந்து நமது இயக்கப்பகுதி அனைத்து ஊர்களுக்கும் கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திருச்சி ஆகிய இடங்களிலிருந்து நமது இயக்கப்பகுதி அனைத்து ஊர்களுக்கும் வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 24.10.2023 மற்றும் 25.10.2023 செவ்வாய், புதன் நாட்களில் திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கு 450 சிறப்புப் பேருந்துகளும்,

கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, கரூர்,புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம்,ஆகிய ஊர்களிலிருந்து கோவை, திருப்பூர்க்கும், மதுரை, தஞ்சாவூர், வேளாங்கண்ணி,புதுக்கோட்டை,காரைக்குடி ஆகிய ஊர்களிலிருந்து திருச்சிக்கும் என 300 சிறப்பு பேருந்துகளும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விடுமுறை முடிந்து பயணிகள் திரும்ப செல்ல 24.10.2023 மற்றும் 25.10.2023 செவ்வாய், புதன் நாட்களில் திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரணியம், திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9:30 மணி வரையிலும், பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை காரணமாக வந்த பயணிகள் திரும்ப செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பேருந்து சேவையை அளிக்க ஏதுவாகும் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கிடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கும் முன்பதிவு சேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மொபைல் ஆப் (Mobile App) Android / I phone கைபேசி மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி இப்பேருந்து வசதியை பயன்படுத்திக்கொள்ள வேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்/

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *