கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இயங்கி வரும் இரத்த வங்கி, தற்போது புதிதாக மேம்படுத்தப்பட்ட கட்டிடத்திற்கு மாற்றியமைத்து, அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு இரத்த வங்கி மருத்துவ அலுவலர் சுகந்தி தலைமை தாங்கினார்.
தஞ்சை மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் திலகம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கமரூல் ஜமான், நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர் சலீம் பாட்சா அனைவரையும் வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை
ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். தொடர்ந்து ரத்ததான தன்னார்வலர்களுக்கும், முகாம் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, கதர் ஆடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சுதாகர், செவிலியர் கண்காணிப்பாளர்கள் கலாராணி, ஜானகி, இரத்ததான தன் ஆர்வலர்கள், முகாம் ஒருங்கிணைப்பாளர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.