மராட்டிய மாநிலம் அகோலா மாவட்டம் பரஸ் கிராமத்தில் இந்து மத வழிபாட்டு தலமான பாபுஜி மகாராஜா கோவில் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் மகாஆர்தி நிகழ்ச்சிக்காக நேற்று இரவு 7 மணியளவில் பக்தர்கள் பலர் குவிந்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்காக மேற்கூரை போடப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் பக்தர்கள் அனைவரும் அந்த கூரையின் கீழ் நின்றுகொண்டிருந்தனர்.
அப்போது பலத்த காற்று மழை காரணமாக எதிராராத விதிமாக வழிபாட்டு தலத்தில் இருந்த மரம் முறிந்து பக்தர்கள் நின்றுகொண்டிருந்த மேற்கூரை மீது விழுந்தது. இதில், கூரையின் கீழ் நின்றுகொண்டிருந்த பக்தர்கள் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவத்தில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும், 23 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.