கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகமலை அருகே அமைந்துள்ள கழுவூர் கிராமத்தில் உள்ள அழகு நாச்சியார் ஆலயம் அமைந்துள்ளது.
ஆலயத்திற்கு செல்லும் நுழைவு வாயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷே விழா நேற்று நடைபெற்றது. கும்பாபிஷே விழாவை முன்னிட்டு நுழைவு வாயில் அருகே யாக குண்டங்கள் அமைத்து காவிரி ஆற்றில் இருந்து
கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தத்திற்கு இரண்டு கால யாக பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று சிவாச்சாரியார் புனித தீர்த்தத்திற்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்ட பின்னர் மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார் கலசித்தினை தலையில் சுமந்தவாறு கோவில் நுழைவு வாயில் கும்பாபிஷேக வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷே விழாவில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் மற்றும் குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.கும்பாபிஷே விழாவில் கலந்து கொண்ட அனைத்து பொதுமக்களுக்கும் அன்னதானம் பிரசாதமாக வழங்கப்பட்டது.