திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் நவக்கிரக தலங்களில் முக்கியமான குரு தலமான
ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. குருபரிகார தலமான இங்கு
வருடம் தோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் இக்கோவிலில் குருபெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.இவ்விழாவில் லட்சகணக்கான மக்கள் பங்கேற்பார்கள்.
சிறப்பு வாய்ந்த இக்கோவிலி கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை முடிவு செய்தது.
இதற்காக கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் தொடங்கியது.
திருப்பணி வேலைகள் நிறைவடைந்ததைத் தொடாந்து கடந்த ஏழாம் தேதி காலை 6.30 மணி முதல் இறையனுமதி வேண்டல்,கணபதி வழிபாடு, மகாசங்கல்பம், எஜமான சங்கல்பம்,1008 மோதகங்களால் ஸ்ரீகலங்காமற்காத்த கணபதி பெருமானுக்கு சிறப்பு யாகம்,அபிஷேகம்,தீபாராதனை,நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திட நவகோள் யாக வழிபாடு,நவக்கிரக அபிஷேகம்,தீபாராதனை,திருமகள் வழிபாடு,மகாலட்சுமி அம்பிகைக்கு 108 தாமரை மலர்களால் சிறப்புயாகம், அபிஷேகம், தனபூஜை, தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல் ,மாலையில் கிராமதேவதை வழிபாடு, கிராமசாந்தி, பூஜை,யாகம், தீபாராதனை,அருட்பிரசாதம் வழங்குதல் நடந்தது.
100 க்கும் மேற்பட்ட ஓதுவாமூர்த்திகள் திருமுறைபாரயணம் செய்தனர். பைரவர்பெருமானுக்கு மகாஅபிஷேகம் ,தீபாராதனை,அருட்பிரசாதம் வழங்குதல் நடந்தது.
அதனை அடுத்து இன்று அதிகாலை ஆறாவது கால யாகபூஜை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து கோவிலில் இன்று அதிகாலை மகாகும்பாபிஷேகம்
நடைபெற்றது.இதில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியில் நாகை செல்வராஜ் எம்.பி, திமுக ஒன்றிய செயலாளர் அன்பரசன் ,தட்சிணாமூர்த்தி
நகர செயலாளர் சிவனேசன் உள்ளிட்ட பிரமுகர்களும் பங்கேற்றனர்.
திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் 600க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ராமு, செயல்அலுவலர் சூரிய நாராயணன்,கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்