Skip to content
Home » திருவானைக்காவல் மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…. விமரிசையாக நடந்தது

திருவானைக்காவல் மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…. விமரிசையாக நடந்தது

  • by Authour

 

திருச்சி திருவானைக்காவலில், பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்கக்கூடிய ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயில் இருக்கிறது.அதன் பதுவுகோயில் சன்னதி வீதியில் நிர்மாணம் செய்யப்பட்டது.

இங்கு மகாகாளியம்மன் என்ற பெயரில் சித்திர வடிவில் காளியம்மன் வடக்கு நோக்கி அருள் பாலிக்கிறார்.திருவானைக்காவல் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் இக்காளியை வணங்கிச் செல்வதால் பிரசித்திப் பெற்ற ஆலயமாக விளங்கி வருகிறது.

, இக்கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை, 11 மணியளவில்  விமரிசையாக நடைபெற்றது.  திருச்சி நாகநாதர்

கோயில் அர்ச்சகர்கள் சிவக்குமார், சசிகுமார் சிவாச்சாரியார் தலைமையில் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

கடங்களில் நிரப்பப்பட்ட புனித நீர் பூஜிக்கப்பட்டு, வேத, மந்திரங்கள், மங்கள் வாத்தியங்கள் முழங்க, தாரை தப்பட்டைகள் இசைக்க, இன்று காலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

கடத்தில் இருந்த புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தேறியது. கும்பாபிஷேகத்தின் போது, மூன்றுக்கும் மேற்பட்ட   பருந்துகள் வானில் வட்டமடித்தன.

இதைக்கண்டு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் “ஓம்சக்தி்.. பராசக்தி…” என்று கோஷங்களை எழுப்பினர்.

கும்பாபிஷேத்தையொட்டி, பக்தர்களுக்கு நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானங்கள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *