Skip to content

ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…. தீர்த்த குடம் எடுத்த 2000 பக்தர்கள்…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாங்கல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோவில் சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த கோயில் ஆகும்.

இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்று 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 26.01.2023 அன்று கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக விழா முன்னிட்டு தீர்த்த குடம் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள்

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு ஊர்வலத்தை கலந்து கொண்டனர். கரூர் நகரப் பகுதியில் இருந்து வாங்கல் பகுதியில் அமைந்துள்ள புதுவாங்கலம்மன் கோவில் வரை தீர்த்த குடம் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் மற்றும் பொதுமக்கள் என 2,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தீர்த்த குடம் எடுத்துச் சென்றனர்.

புனித தீர்த்த குடம் எடுத்து செல்லும் நிகழ்ச்சியில் குதிரை காவடி, யானை மேல் காவடி, மயிலாட்டம், ஒயிலாட்டம் என ஆட்டம் பாட்டத்துடன் பக்தர்கள் திரளாக பங்கு பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!