கோவை, மருதமலை முருகன் கோவிலில் நாளை காலை 8.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வாகனம் நிறுத்தும் இடம், கோவில் படிகட்டு பகுதி, மலை அடிவாரம், கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனையொட்டி நான்கு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் மாற்று வழியில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் பவன் குமார்:-
மேலும் பக்தர்கள் வரும் வழியில் நீர் மோர் பந்தல் மற்றும் தேங்காய் நார்களை பாதையில் அமைத்தும் தண்ணீர் ஸ்பிரே போன்றவற்றை கோவில் படிகட்டுகளில் ஏற்பாடு செய்து வெயிலின் தாக்கத்தை குறைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளனர். ஆங்காங்கே பக்தர்களை குழுவாக பிரித்து எல்.இ.டி வாயிலாக கும்பாபிஷேகத்தை காணும் வகையில் 10 எல்.இ.டிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு 1000 – க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர். மேலும் வாகனங்களை நிறுத்த தனியார் இடங்களும் தேர்வு செய்யப்பட்டு 2000 – க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை காவல் துறையினர் மேற்கொண்டு உள்ளனர்.
வனத்தை ஓட்டி அமைந்து உள்ளதால் வனத்துறை சார்பில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த 3 வணக் கோட்டத்தை சேர்ந்த 50 – க்கும் மேற்பட்ட வனத் துறையினர் ஈடுபடுகின்றனர்.