குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம்
துண்டிக்கப்பட்டது. போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பலர் வெள்ள நீரில் சிக்கி தவிக்கின்றனர். மீட்பு குழுக்கள் அனைவரையும் மீட்டு வருகிறது. இந்த நிலையில், தன் சொந்த மாவட்டமான தூத்துக்குடியில் திருவைகுண்டம் வட்டார பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான மக்களை விடிய விடிய மீட்கும் பணிகளில் இயக்குநர் மாரிசெல்வராஜ் ஈடுபட்டார்.