Skip to content
Home » கரூரில் குடிநீர் குழாய் உடைந்து பள்ளிக்குள் புகுந்த தண்ணீர்…

கரூரில் குடிநீர் குழாய் உடைந்து பள்ளிக்குள் புகுந்த தண்ணீர்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசிய மங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி வளாகத்தினுள் குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து மருங்காபுரி காவிரி கூட்டு குடிநீர் குழாய் சொல்கிறது. இந்நிலையில் இன்று பள்ளி வளாகத்தில் செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் ஆனது பள்ளி வளாகத்தினுள் குளம் போல் தேங்கியது. இடம் பற்றாக்குறை காரணமாக உள்ள இந்த பள்ளியில் வளாகத்தில் மேற்கூரை அமைத்து அதன் அடியில் மாணவ மாணவிகள் படித்து வந்த நிலையில் திடீரென குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் பள்ளி மாணவ மாணவிகள் அவதிக்குள்ளாகினர். குளம்போல் தேங்கிய தண்ணீரானது வெளியேறி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் சூழ்ந்தது. பள்ளி வளாகம் முழுவதும் குடிநீர் குளம் போல் தேங்கியது குறித்து இன்று குளித்தலை பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டிருந்த மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் முருகாம்பாள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பள்ளிக்கு விடுமுறை அளிக்க கூறினர். இதனை அடுத்து காவிரி கூட்டு குடிநீர் பம்மிங் செய்வது நிறுத்தப்பட்டது.மேலும் இந்த பள்ளி வளாகத்தில் செல்லும் காவிரி கூட்டு குடிநீரில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு வருவதாகவும், போதும் இட வசதி இல்லாத இந்த சூழ்நிலையில் இது போன்ற அடிக்கடி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டிருந்தால் பள்ளி மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை அடுத்து இன்றும், நாளையும் குடிநீர் குழாய் சரி செய்யும் பணிகள் நடைபெற உள்ளதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!