பிரபல ரவுடி கருப்பத்தூர் கோபாலின் கூட்டாளி ரவுடி வெட்டு சங்கர்(38) இவர் கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர். இவா் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 40க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன.
சில தினங்களுக்கு முன் வெட்டு சங்கர் லாலாப்பேட்டை போலீஸ் நிலைய எல்லையில் தகராறில் ஈடுபட்டு ஒருவரை அரிவாளால் வெட்டினார். இந்த வழக்கில் இவரை போலீசார் தேடி வந்தனர். அப்போது அவரை போலீசார் விரட்டி பிடித்தபோது வெட்டு சங்கர் தவறி விழுந்து கால் உடைந்தது.
இதற்காக இவர் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 4 தினங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவருக்கு ஆபரேசன் செய்ய முடிவு
செய்யப்பட்டது. இதற்காக அவரை ஆபரேசன் செய்ய ஏற்பாடு செய்துகொண்டிருந்த நிலையில் வெட்டு சங்கருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனையிலேயே இறந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.