கரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த நான்கு தினங்களாக கனமழை பெய்து வந்துள்ளது.
இதன் காரணமாக குளித்தலை அருகே கோட்டமேட்டில் உள்ள நத்தமேடு கோவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.
இந்த ஆலமர நிழலில் பலரும் இளைப்பாறியும் மேலும் வைகைநல்லூர் ஊராட்சி கிராம சபை கூட்டங்கள் அதிக அளவில் இந்த இடத்திலும், அனைத்து கட்சி பொதுக் கூட்டங்கள் மற்றும் 100 நாள் வேலை
செய்பவர்கள், விவசாய பொதுமக்கள் அனைவரும் இந்த மரத்தின் நிழலில் இளைப்பாரி வந்துள்ளனர்.
தற்போது கடந்த நான்கு நாட்களாக பெய்த கனமழை காரணமாக இந்த ஆலமரம் இன்று வேரோடு சாய்ந்து விழுந்தது.
அப்போது அருகில் யாரும் இல்லாத காரணத்தினால் எந்த வித அசம்பாவிகளும் நிகழவில்லை
மேலும் தங்களுக்கு பல வருடங்களாக நிழல் கொடுத்து வந்த ஆலமரம் வேரோடு சாய்ந்து விழுந்ததால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.