கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பட்டவர்த்தி ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் மயிலாடுதுறை – கோவை ஜனசதாப்தி அதிவிரைவு ரயிலில் பெண் ஒருவர் எதிர்பாராத விதமாக அடிப்பட்டு தூக்கிவீசப்பட்டதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்துள்ளார்.
அருகில் உள்ள ரயில்வே கேட் ஊழியர்கள் இதுகுறித்து திருச்சி ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாமல் தலை நசுங்கிய நிலையில் உயிரிழந்த மூதாட்டி யார்….? எந்த ஊரை சேர்ந்தவர்…? என்பது குறித்து திருச்சி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.