Skip to content

குளித்தலை அருகே எல்கை பந்தயம்… காளைகள், குதிரைகள் சீறிப்பாய்ந்தன..

  • by Authour

 

கரூர் மாவட்டம் குளித்தலை ரயில்வே கேட்ட அருகே மணத்தட்டை பகவதி பாய்ஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக 13 ஆம் ஆண்டு எல்கை பந்தையப் போட்டி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் மாடுகளுக்கான பூஞ்சிட்டு மாடு சிறிய இரட்டை மாடு பெரிய இரட்டை மாடு பந்தைய போட்டிகள் நடைபெற்றன.

குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

எல்லைக் கூட்டியிலிருந்து காளைகள் சீறிப்பாய்ந்தன.

பூஞ்சிட்டு மாட்டிற்க்கு மூன்று மைல் தொலைவும், சிறிய இரட்டை மாட்டிற்கு ஆறு மைல் தொலைவும், பெரிய இரட்டை மாட்டிற்கு எட்டு மேல் தொலைவும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடைவதற்காக காளைகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டு சாலையில் சீறிப்பாயுதே பொதுமக்கள் பலரும் கண்டு ரசித்தனர்.

குறித்த இலக்கை குறைவான நேரத்தில் எட்டிய காளை மாடுகளுக்கு எம்எல்ஏ மாணிக்கம் பரிசுத் தொகைகளை வழங்கினார்.

error: Content is protected !!