கரூர் மாவட்டம் குளித்தலை பெரிய பாலம் சண்முக நகரை சேர்ந்தவர் ராஜராஜேஸ்வரி(19.)இவர் அய்யர் மலை அரசு கலைக்கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.
தாய் தந்தையர் வீட்டில் இல்லாத நிலையில் ராஜராஸே்வரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அறையை விட்டு நீண்ட நேரமாக வெளியே வராத காரணத்தினால் அவரது சகோதரி ஜன்னல் வழியாக பார்த்தபோது இறந்த நிலையில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்தால் குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.