கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வேப்பங்குடியை சேர்ந்தவர் சுபாஷ்சந்திரபோஸ். இவர் சென்னையில் உள்ள தனியார்
ஹோட்டலில் சமையல் கலைஞராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருச்சி மாவட்டம் கரும்புளிப்பட்டியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவருக்கும் இன்று அய்யர்மலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த மணமகன் சுபாஷ் சந்திரபோஸ் உட்பட அவரது உறவினர்கள் 25 பேர் திருமண மண்டபத்திற்கு அருகில் உள்ள குட்டி பாட்டன் மணி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரத்ததான முகாமில் ரத்த தானம் செய்தனர்.
தனது திருமண தினத்தன்று பலரின் உயிரைக் காப்பாற்ற வகையில் ரத்ததானம் செய்த மணமகன் மற்றும் உறவினர்கள் செயலை பொதுமக்கள் பலரும் வெகுவாக பாராட்டினர்.