கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலை சுற்றி 2 கிலோமீட்டர் தூரத்தில், வரவூர் சாலை, சரவணபுரம் சாலை என அப்பகுதியில் 3 கல்குவாரியுடன் கிரசர் செயல்பட்டு வருகிறது. இதில் 2 கல்குவாரி மற்றும் கிரசர் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் திமுக சட்டமன்ற
உறுப்பினர் பழனியாண்டி மற்றும் உறவினர் பெயரில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது.
சரவணபுரம் செல்லும் சாலையில் உள்ள கல்குவாரி கிரசரில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் 10க்கும் மேற்ப்பட்டவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கார்கேஸ்வரர் போரோ (19 ). என்பவரும் அங்கு வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை ஜல்லி உடைக்கும் கிரசரில் வேலை பார்த்திருந்தபோது விபத்து ஏற்ப்பட்டு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த செய்தி அறிந்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் யாரையும் கல்குவாரிக்குள் உள்ளே அனுமதிக்கவில்லை.
விபத்து குறித்து மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் காவல் துறையிடம் விளக்கம் கேட்க முயற்சித்த போது சரியான தகவலை தர மறுத்து விட்டனர்.
திமுக எம்எல்ஏ உறவினர் கல்குவாரியில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.