கரூர் மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்து வருவதால், நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குளங்கள், குட்டைகள் மற்றும் ஓடைகளின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் தண்ணீரால் நிரம்பியுள்ளது. எனவே, பொதுமக்களும் மற்றும் தங்களது குழந்தைகளையும் குளம் மற்றும் குட்டைகளில் யாரையும் குளிக்க அனுமதிக்க வேண்டாமென மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் நீர்நிலைகளின் கரையில் எச்சரிக்கை பலகை வைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமெனவும், கோடை மழையால், நீர் நிரம்பியுள்ள தடுப்பணைகள், குளங்கள், குட்டைகளில் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டுமெனவும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஒலிபெருக்கி வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அறிவித்துள்ளார்.