தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பவதற்கான பணிகளை பூமி பூஜையுடன் இஸ்ரோ தொடங்கியுள்ளது. குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க கடந்தாண்டு தமிழகம் வந்த பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அன்றைய தினமே ரோகிணி 6H 200 சிறிய வகை ராக்கெட்டை திட்டமிட்டப்படி இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,233 ஏக்கர் நிலங்கள் கையக்பபடுத்தப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளது.
